இமாலயாவில் அண்ணாச்சி ரொமான்ஸ் ஆக்க்ஷன்..! நெட்டிசன்கள் கருத்து என்ன ?

0 9137

தமிழகமே கோடை வெயிலிலும், தேர்தல் ஜூரத்திலும் தகித்துக் கொண்டிருக்க, வட நாட்டு நடிகையுடன் இமாலயாவில் லெஜண்ட் ஸ்டார் சரவணன் நடித்த ஆக்சன் ரொமான்ஸ் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டிருக்கின்றது. 

தள்ளாடிக் கொண்டிருக்கும் தமிழ் திரை உலகை நம்பி கோடிகளை கொட்டி லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் பிரமாண்டமாய் புதிய படம் ஒன்றை தயாரித்து அதில் நாயகனாக நடித்து வருகின்றார்.

பெயரிடப்படாத இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இமாலயாவில் உள்ள மணாலியில் விறு விறுப்பாய் நடந்து வருகின்றது.

இந்தபடத்தின் ஆக்சன் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி தென்னாட்டு ஷாரூக்கான் என்ற பட்டப்பெயரை அண்ணாச்சிக்கு பெற்றுத்தந்தது.

அண்ணாச்சியின் விளம்பர படம் வந்தாலே நெட்டிசன்களை கையில் பிடிக்க முடியாது, இந்த நிலையில் சினிமா புகைபடங்களில் ஆக்ஷன் சீன் காண்பித்த அண்ணாச்சி குளு குளு பனிமலையில் செய்த ரொமான்ஸ் புகைப்படங்கள் வெளியானதால் நெட்டிசன்கள் கருத்து மழை பொழிந்து வருகின்றனர்.

டி.ராஜேந்தர் பாணியில், நம்ம அண்ணாச்சி வட நாட்டு நடிகை கீத்திகா திவாரியை தொடாமலேயே காதல்காட்சிகளில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜின் பாடலுக்கு அண்ணாச்சி குளிருக்கு இதமான ஆடைகளை அணிந்து ஜம்மென்று நடித்திருந்தாலும், வழக்கமான நாயகிகள் போலவே கீத்திகா திவாரி இந்த படத்தில் கிழிந்து போன மாடர்ன் உடையை அணிந்து நடித்துள்ளார்.

சிறிய பட்ஜெட் படங்களில் கிழிந்த ஆடைகளோடு நடித்தால் கூட பரவாயில்லை, பிரமாண்டமாய் ஜவுளிக்கடலுடன் நடிக்கும் போதாவது நல்ல ஆடைகளை உடுத்தலாமே..! என்று நாயகி கீத்திகா திவாரியை நெட்டிசன்கள் கலாய்த்தாலும், ஒரு பக்கம் இந்த ஜோடியின் சைனிங் புகைப்படங்களை பார்த்து முரட்டு சிங்கிள்ஸ் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்

தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு பயந்து தியேட்டர்களுக்கு செல்லவே மக்கள் அஞ்சிவரும் நிலையில், ஏராளமான திரையரங்குகள் காற்று வாங்கின்றன. இந்த நிலையில் தனது படத்தின் மூலம் மீண்டும் திரையரங்குகளுக்கு தாய்மார்களை திருவிழா கூட்டம் போல வரவைப்பதற்கு சிறப்புத்திட்டம் ஒன்று அண்ணாச்சியின் கைவசம் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் உழைத்து களைத்த பணத்தை முதலீடாக கொட்டி படம் எடுக்கும் அண்ணாச்சிக்கு அந்த படத்தை மக்களிடம் எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற வித்தை தெரியாமலா இருக்கும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments