பின்தங்கிய மேற்குவங்கம் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

0 2225
மேற்கு வங்கத்தில் தொழில் வளர்ச்சிக்கும், நீர்ப் பாசனத்துக்கும் இடதுசாரி, திரிணாமூல் காங்கிரஸ் அரசுகள் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தொழில் வளர்ச்சிக்கும், நீர்ப் பாசனத்துக்கும் இடதுசாரி, திரிணாமூல் காங்கிரஸ் அரசுகள் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் புரூலியாவில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது, ஒரு காலத்தில் நீர்வளம் மிக்கதாக இருந்த புரூலியாவில் இப்போது வறட்சி நிலவுவதாகக் குறிப்பிட்டார்.

முதலில் இருந்த இடதுசாரி அரசும், இப்போதுள்ள திரிணாமூல் காங்கிரஸ் அரசும் மேற்கு வங்கத்தில் தொழில்வளர்ச்சிக்கும் நீர்ப்பாசனத்துக்கும் திட்டங்களை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.

தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கால்நடை வளர்ப்புத் தொழில் பின்னடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். காலில் காயமடைந்துள்ள மம்தா பானர்ஜி விரைவில் நலம் பெற வேண்டும் எனத் தான் இறைவனை வேண்டிக்கொள்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments