பா.ம.க.வினர் ஒத்துழைக்கவில்லை- தேர்தல் பிரச்சாரத்தின் போது கண்கலங்கிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்கு சேகரிப்பின் போது கண்கலங்கினார்.
தனது சொந்த ஊரான சேவூரில் திரௌபதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரச்சாரம் செய்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆரணி தொகுதியில் தற்போது வரை 80 சதவீத திட்டப்பணிகளை முடித்துள்ளதாகவும், எஞ்சிய 20 சதவீத பணிகளையும் முடிக்க தனக்கே வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அமைச்சர் கண்கலங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவின் கூட்டணி கட்சியான பா.ம.க.வினர் ஆரணி பகுதியில் இரு பிரிவினராக செயல்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், ஒரு குழுவினர் அமைச்சருக்கு ஆதரவாகவும், ஒரு குழுவினர் அமைச்சருக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் பணிகளிலும் பா.ம.கவின் ஒரு தரப்பினர் ஒத்துழைக்காததால்அமைச்சர் கண்கலங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments