பிரேசிலில் ஒரே நாளில் 90,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 2764
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 648 பேர் பலியாகி விட்டதாகவும் பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களையும் சேர்த்து அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேசிலில் 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிபர் ஜெயிர் போல்சநோரோ தோல்வி அடைந்து விட்டார் என பெரும்பான்மையான மக்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் 4 ஆவது முறையாக புதிய சுகாதார அமைச்சரை நியமித்துள்ளார் அவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments