கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

0 4928
கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா உறுதி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இதுவரை  5 பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 60க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிதாக கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் 7 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

அதன் காரணமாக மற்ற மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments