பணம், நகைக்காக பெண் 8 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கு : தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது உயர்நீதிமன்றம்
பணம் நகைக்காக 8 துண்டுகளாக வெட்டி பெண் கொடூரக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த சரோஜா என்பவரை அவரது எதிர் வீட்டில் வசித்து வந்த யாசர் அராபத் என்பவன் பணம், நகைக்காக கடந்த 2013ஆம் ஆண்டு 8 துண்டுகளாக வெட்டி வீசினான்.
அதற்காக அவனுக்கு மாவட்ட நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது.
தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அதனை அரிதிலும், அரிதான வழக்காக கருதுவதால், தூக்கு தண்டனை விதிக்க முடியாது என்று கூறினர்.
எனவே, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாகவும் யாசர் அரபாத்தை 25 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பு செய்தும் விடுதலை செய்ய கூடாது எனவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Comments