மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அள்ளிக்குவித்த வாக்குறுதிகள்?

0 2757
மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அள்ளிக்குவித்த வாக்குறுதிகள்?

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தமது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், மாணவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறும் வகையில் கிரெடிட் கார்டு வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் அரசு மானிய உதவி வழங்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்பன உள்ளிட்டவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக மம்தா அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments