திருப்பூர், தாராபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை - 8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்

0 3199
திருப்பூர், தாராபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொருளாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை - 8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மக்கள் நீதி மையம் கட்சி பொருளாளர் சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் ஆகிய 2 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

அவருக்கு சொந்தமான அனிதா டெஸ்காட் நிறுவனத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை, கொரோனா கவச ஆடைகள், மாஸ்க் ஆகியவை உற்பத்தி செய்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments