அட்லாண்டிக் பெருங்கடலில் ஆபத்தான நிலையில் சிக்கித் தவித்த 52 அகதிகள் மீட்பு
ஸ்பெயின் அருகே, அட்லாண்டிக் பெருங்கடலில் சிக்கித் தவித்த 52 அகதிகள் மீட்கப்பட்டனர்.
ஆப்ரிக்காவில் இருந்து அகதிகளாக வந்த 52 பேர் கிரான் கனரியா தீவருகே கடலில் சிக்கிக் கொண்டனர். கடும் குளிரில் நடுங்கி வந்த அவர்களை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
அவர்களில், மிகவும் கவலைக்கிடமாக இருந்த 2 வயது சிறுமிக்கு உடனடியாக சி.பி.ஆர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்தார்.
சிறுமியைப் போலவே உடல் வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்த கர்ப்பிணியும், 6 சிறுவர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Comments