தமிழகத்தில் 20 இடங்களில் நடைபெற்ற அதிரடிச் சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு - வருமானவரித்துறை
தமிழ்நாட்டில், 20 இடங்களில் நடைபெற்ற அதிரடிச் சோதனையில் 400 கோடி ரூபாய் அளவிற்கு கணக்கில் வராத வருவாய் கண்டயறிப்பட்டுள்ளதாக, வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேளாண் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் கொள்முதல் என்ற அடிப்படையில் மட்டும் 100 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு நடைபெற்றதை கண்டறிந்ததாக, கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பங்கு பத்திர பரிவர்த்தனை என்ற பெயரில் முதலீடு திரட்டப்பட்டு 150 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு நடைபெற்றது தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 11.03.2021 அன்று, சென்னை, கோயம்புத்தூர், சேலம், விருதுநகர், தேனி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சோதனையை அடுத்து, கருப்பு பணத் தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை முடுக்கிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments