தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் - தேர்தல் ஆணையம்
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், இதுவரை 331 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பணப்பட்டுவாடா மற்றும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காகவும், தேர்தல் செலவின பார்வையாளர்கள் 295 பேர் களமிறக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
Comments