"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரயில் நிலையம் அமைக்க 2017 ல் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தாக்கலான பொதுநல மனுவை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.
அப்போது அங்கு ரயில்வே நிறுத்தம் அமைத்தால் எத்தனை பயணிகள் வருவார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய ரயில்வே துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நான்கு வாரங்களில் புதிய மனுவை அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெற்கு ரயில்வேவிற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
Comments