ஜோ பைடனை தோற்கடிக்க ரஷ்ய அதிபர் சதி செய்தாரா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் பரபரப்பு தகவல்

0 3667
ஜோ பைடனை தோற்கடிக்க ரஷ்ய அதிபர் சதி செய்தாரா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க ரஷ்ய அதிபர் புதின் முயற்சித்தார் என அமெரிக்க அரசின் உளவுத் துறை அறிக்கையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு அதில் முக்கிய பங்கு இருந்தது என கூறப்பட்டுள்ளது.

உக்ரேன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது உள்ள நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில், பைடனையும் சேர்க்க , டிரம்ப் ஆதரவாளர்கள் ரஷ்ய அரசின் உதவியுடன் திட்டமிட்டனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments