தஞ்சாவூர் அம்மாபேட்டை பள்ளியில் மேலும் ஒரு மாணவி மற்றும் 2 பெற்றோருக்கு கொரோனா உறுதி
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கனவே, 56 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
லெஜிலியா அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதியில் தங்கி பயிலும் மாணவிக்கு முதலில் கொரோனா உறுதியானதையடுத்து, அங்குள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், ஆசிரியை உட்பட மாணவிகள் 56 பேர் மற்றும் மாணவிகளின் பெற்றோர் 9 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதனை அடுத்து பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டு, அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு, இரண்டு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு மாணவி மற்றும் பெற்றோர் 2 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Comments