அமெரிக்காவில் மசாஜ் பார்லரில் மர்ம நபர் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு : 7 பேர் உயிரிழப்பு

0 2407
அமெரிக்காவில் மசாஜ் பார்லரில் மர்ம நபர் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு : 7 பேர் உயிரிழப்பு

மெரிக்காவில் மசாஜ் பார்லரில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டா நகரின் அக்வொர்த் பகுதியில் ஆசியாவைச் சேர்ந்த சிலர் மசாஜ் பார்லர் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பார்லருக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் நிகழ்விடத்தில் உயிரிழந்தனர்.

தொடர்ச்சியாக மற்றொரு மசாஜ் மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் நிகழ்விடத்திலும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments