பிரான்சில் கொரோனாவின் மூன்றாவது பேரலை தீவிரம் : நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜீன் காஸ்டெக் அறிவிப்பு
கொரோனாவின் மூன்றாவது பேரலை எழுந்துள்ளதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தொடங்கி இந்த மாதத்தில் தான் அதிகபட்சமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முதன் முறையாக ஒரே வாரத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மருத்துவமனைகள் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.
புதிய ஊரடங்கு தவிர வேறு வழியில்லையா என்று அரசு சுகாதாரத்துறை ஆலோசித்து வருகிறது.
மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா போன்றவை பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் பிரான்சில் அந்தப் பணியும் மந்தமாகவே நடைபெறுகிறது.
Comments