தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணிகள் தீவிரம்!

0 3222
தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணிகள் தீவிரம்!

தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.பல்வேறு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ந.அமுதா மாட்டு வண்டியில் வந்து மனுதாக்கல் செய்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணகோபால் தொண்டர்களின் முரசு கொட்டும் பினனணியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடராஜன் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட திசையன்விளையைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ராஜீவ் என்பவர்10 ரூபாய் நாணயங்களுடன் மனுத்தாக்கல் செய்தார்.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் அபூபக்கர் மற்றும் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளி ஆகியோர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் மனுதாக்கல் செய்தனர்.

தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பழ கருப்பையா வேட்பு மனு தாக்கல் செய்தார். கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு தனது ஆதரவாளருடன் வந்த பழ கருப்பையா, தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேந்திரனிடம் வேட்பு மனுவை அளித்தார்.

தியாகராயர் நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யாவையும், திமுக சார்பில் போட்டியிடும் கருணாநிதியும் எதிர்த்து பழ கருப்பையா களம்காண்கிறார்.

பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளர் என்.ஆர்.தனபாலன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதற்காகக் கூட்டணிக் கட்சியினருடன் எருக்கஞ்சேரியில் உள்ள அலுவலகத்துக்குச் சென்ற அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

சென்னை தியாகராயநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கருணாநிதி, கோடம்பாக்கத்தில் தேர்தல் அலுவலர் ராஜேந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மறைந்த திமுக எம்எல்ஏ அன்பழகனின் தம்பியான கருணாநிதி, அதிமுக வேட்பாளர் சத்யாவை எதிர்த்து களமிறங்கி இருக்கிறார். 

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் பொன்னுசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், பொன்னுசாமிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் பொன்னுசாமி வேட்பு மனு தாக்கல் செய்தார். அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்தார். கடந்த 2011 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், பொன்னுசாமிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மணிமாறன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து  கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்புமனு தாக்கல் செய்த பின், வேட்பாளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் சினேகா மோகன்தாஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலின் சுனேஜாவிடம் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் மேயர் சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் சைதை துரைசாமியும், அமமுக சார்பில் செந்தமிழனும் போட்டியிடுகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலன் நுங்கம்பாக்கத்திலுள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கையர்கணியிடம் அவர் வேட்புமனுவை வழங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பூவும், அமமுக சார்பில் வைத்தியநாதன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மணிமாறன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து  கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வேட்புமனு தாக்கல் செய்த பின், வேட்பாளர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜலட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருவேங்கடத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற அவர், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சென்னை தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யா வேட்பு மனு தாக்கல் செய்தார். கோடம்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம் அவர் வேட்பு மனு மற்றும் ஆவணங்களை அளித்தார். இந்த தொகுதியில் திமுக சார்பில் ஜெ.கருணாநிதியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ கருப்பையாவும் போட்டியிடுகின்றனர்.

மயிலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மாசிலாமணி வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அவர், முன்னதாக மயிலம் சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, கூட்டேரிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் பெருமாளிடம் மனுத்தாக்கல் செய்தார்.

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கு பாஜக சார்பில் களமிறங்கும் வினோஜ் பி. செல்வம், அமமுக சார்பில் போட்டியிடும் சந்தானகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முஹம்மது கதாபி ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் தாக்கல் செய்தனர். இதேதொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கிச்சா ரமேஷ் என்பரும் களம் காண்கிறார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமமுகவில் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், அக்கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் கே.ஏ.சங்கர்குமார் என்பவர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து கச்சேரிமேடு வரை வாழை மரம் கட்டிய மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த அவரை 200 மீட்டர் தூரத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவருடன் சென்று தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான கூட்டணி என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கே.என். நேரு போட்டியிடுகிறார். இந்த நிலையில், அந்த தொகுதியின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் பத்மநாதனும், அமமுக சார்பில் மனோகரனும் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் மென் பொறியாளர் சிவசங்கரி கோடம்பக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிவசங்கரி, முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார். இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யாவையும், திமுக சார்பில் போட்டியிடும் ஜெ. கருணாநிதியும் எதிர்த்து போட்டியிடுகிறார்.

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜே ஜே எபினேசர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முகம்மது அஸ்லமிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எபினேசருக்கு 200 க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆர்.எஸ்.ராஜேஷ், அமமுக சார்பில் காளிதாஸ், மக்கள் நீதி மய்யம் சார்பில் பாசில் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கொளத்தூர் தொகுதியில் இருந்து இருமுறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது முறையும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜாராம் களமிறக்கப்பட்டுள்ளார். இதே போன்று மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜெகதீஷ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில் செல்வாவும் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் எழிலன் நுங்கம்பாக்கத்திலுள்ள மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கையர்கணியிடம் அவர் வேட்புமனுவை வழங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பூவும், அமமுக சார்பில் வைத்தியநாதன் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

மேட்டூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சதாசிவம், வேட்புமனுவினைத் தாக்கல் செய்தார். கூட்டணிக் கட்சியினருடன் சதுரங்காடியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் சார் ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சீனிவாச பெருமாளை எதிர்த்து சதாசிவம் களம் காண்கிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கெளதம் சங்கர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். செஞ்சி பேருந்து நிலையம் முதல் நான்கு முனை சந்திப்பு வரை ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற கெளதம் சங்கர், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரகு குமாரிடம்  மனு தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜேந்திரன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் மங்களநாதனிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். 

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக, அமமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர். அங்கு பாஜக சார்பில் களமிறங்கும் வினோஜ் பி. செல்வம், அமமுக சார்பில் போட்டியிடும் சந்தானகிருஷ்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முஹம்மது கதாபி ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் தாக்கல் செய்தனர். இதேதொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கிச்சா ரமேஷ் என்பரும் களம் காண்கிறார். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.சி.சண்முகையா வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்த வெளி வேனில் நின்றவாறு எம்.சி.சண்முகையாவிற்காக வாக்கு சேகரித்தார்.

இதன் பின்னர் ஒட்டபிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வவிநாயகத்திடம் எம்.சி.சண்முகையா வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச் செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்டபொம்மன் சிலையில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்ற தங்க தமிழ்ச்செல்வன், போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனுவை வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் கெளதம் சங்கர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். செஞ்சி பேருந்து நிலையம் முதல் நான்கு முனை சந்திப்பு வரை ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்ற கெளதம் சங்கர், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரகு குமாரிடம் மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கீதாஜீவன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ பேரணியாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கீதாஜீவன், அங்கிருந்து தாரை தப்பட்டை முழங்க சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக வந்தார்.

தொடர்ந்து சார் ஆட்சியர் சிம்ரன் சித் சிங்கிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் மென் பொறியாளர் சிவசங்கரி கோடம்பக்கம் மண்டல அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேந்திரனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சிவசங்கரி, முதன்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குகிறார். இவர் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யாவையும், திமுக சார்பில் போட்டியிடும் ஜெ. கருணாநிதியும் எதிர்த்து போட்டியிடுகிறார்.

தியாகராயர் நகர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பழ கருப்பையா வேட்பு மனு தாக்கல் செய்தார். கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்திற்கு தனது ஆதரவாளருடன் வந்த பழ கருப்பையா, தேர்தல் நடத்தும் அதிகாரி ராஜேந்திரனிடம் வேட்பு மனுவை அளித்தார்.

தியாகராயர் நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் சத்யாவையும், திமுக சார்பில் போட்டியிடும் கருணாநிதியும் எதிர்த்து பழ கருப்பையா களம்காண்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். மாதவரம், காந்தி பிரதான சாலையிலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்த வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி சரிபார்த்து ஏற்றுக்கொண்டார். முன்னதாக, கட்சி கொடிகளுடன் பேரணியாக வந்த தொண்டர்களை, தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ள தொலைவில், தடுப்பு வேலிகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வெற்றி அழகன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகனுக்கு வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அயனாவரத்திலுள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகிருபாகரனிடம் திமுக வேட்பாளர் வெற்றி அழகன் வேட்பு மனுவை வழங்கினார்..

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஜே.சி.டி.பிரபாகரும், தேமுதிக சார்பில் சுபமங்கலம் டில்லிபாபுவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஸ்ரீஹரன் பாலனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீதரும் போட்டியிடுகின்றனர்..

சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சார்பில் போட்டியிடும் பிரபாகர் ராஜா வேட்புமனுத் தாக்கல் செய்தார். மேளதாளங்கள் முழங்க ஏராளமான திமுக நிர்வாகிகளுடன் சாலிகிராமத்தில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது, அங்கிருந்த காவலர்கள் தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளருடன் 2 பேரை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் எனத் தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அறிவுறுத்தியபடி 2 திமுக நிர்வாகிகளுடன் சென்று, விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக உட்பட 5 கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மயிலாப்பூர் நடப்பு எம்எல்ஏவும், அதிமுக வேட்பாளருமான முன்னாள் டிஜிபி ஆர்.நட்ராஜ், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் த.வேலு,  மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் நடிகை ஸ்ரீப்ரியாவும், தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அமமுக வேட்பாளர் கார்த்திக், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலட்சுமி ஆகியோரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் பத்பநாபபுரத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜான் தங்கம் வேட்புமனு தாக்கல் செய்தார். தக்கலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் பத்பநாபபுரம் சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் சென்னை - கொளத்தூர் தொகுதியில் அ.மு.மு.க சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் ஜெ. ஆறுமுகம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சென்னை - அயனாவரத்தில் உள்ள மாநிகராட்சி அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஜெ. ஆறுமுகம் தமது வேட்பு மனுவை சமர்பித்தார்.

சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஆதிராஜாராம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலரான தங்கவேல் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் மூன்றாம் முறையாகப் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐட்ரீம்ஸ் மூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். ராயபுரம் கல்மண்டபம் சாலையிலிருந்து கூட்டணி கட்சியினர்களுடன் ஆட்டோவில் ஊர்வலமாக வந்த அவர், மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ராயபுரம் கல்மண்டபம் சாலையில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக வந்ததால் இருபுறமும் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் எஸ். ஆர். செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அருகே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். 

திருப்பத்தூரில் முகக்கவசம் இல்லாமல் வந்த மாற்று வேட்பாளர் தோளிலிருந்த துண்டைக் கொண்டு முகத்தை மூடி சமாளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி, மாற்று வேட்பாளரான ராஜமாணிக்கம் என்பவரோடு மனுத்தாக்கல் செய்ய சார் ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தார். அப்போது அலுவலகப் பணியாளர்கள் ராஜமாணிக்கத்தை முகக்கசவம் அணிய வலியுறுத்திய போது, அதனை எடுத்து வராததால் பதறிப்போய் துண்டைக் கொண்டு முகத்தை மூடினார்...

பின்னர் உடனடியாக ஒரு முகக்கவசத்தை ஏற்பாடு செய்த பின்னர் வேட்பாளருடன் மனுத்தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்ட அவர், சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் கெளரிசங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முஹம்மது அஸ்லாமிடம் வேட்புமனுவை வழங்கினார். 

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான டெய்சிகுமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த அவர், பின்னர் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பரமக்குடியில் ஏராளமானத் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்ற திமுக வேட்பாளர் முருகேசன், வேட்புமனு தாக்கல் செய்யாமல் பாதி வழியிலேயே திரும்பிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்தனர்.

திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மேல தாளங்கள் முழங்க வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக சென்ற முருகேசன், திடீரென தன் காரில் ஏறி புறப்பட்டு சென்றதால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து விசாரித்த போது, முருகேசன் ஏற்கனவே வகித்து வரும் கவுன்சிலர் பதவியை இன்று ராஜினாமா  செய்ததாகவும், அது ஏற்கப்பட்ட பின்பே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பதால் பாதியிலேயே புறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு வேட்பு மனு தாக்கல் செய்தார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு சில மாதங்களுக்கு முன்பு பதவியில் இருந்து விலகியதோடு, மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில், அடையாறில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் சந்தோஷ் பாபு வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் அசோக்கும், காங்கிரஸ் சார்பில் ஹசானும், அமமுக சார்பில் சந்திர போஸ் என்பவரும் போட்டியிடுகின்றனர்.

சென்னை ராயபுரம் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இராமஜெயம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கட்சித் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, மூலக்கொத்தளம் மாநகராட்சி 5ஆவது மண்டலத்தில் உள்ள தேர்தல் அலுவலர் பேபியிடம், வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கும் துரை கி.சரவணன், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த அவரை, புவனகிரி தாலுக்கா அலுவலகம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதி என்பதால், இருவருடன் சென்று தேர்தல் நடத்தும் அலுவலர் உதயகுமாரிடம் சரவணன் தனது வேட்பு மனுவை அளித்தார்.

செங்கல்பட்டு அ.ம.மு.க வேட்பாளர் மருத்துவர் சதீஷ்குமார், சைக்கிளில் வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார். பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து கூடடணி கட்சி நிர்வாகிகளுடன் சைக்கிளில் புறப்பட்ட வேட்பாளர், முக்கிய வீதிகள் வழியாக வலம வந்து இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தார். அங்கு ,வட்டாட்சியரிடம் மருத்துவர் சதீஷ்குமார், தமது வேட்பு மனுவை சமர்ப்பித்தார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சைக்கிளில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்ததாக அ.ம.மு.க வேட்பாளர் மருத்துவர் சதீஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தனித்தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரகுமாரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது  வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருவேங்கடம் சாலையில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்த அவர், தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். 

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கஸ்ஸாலி வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவல்லிக்கேணியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மோகன்ராஜிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மணிரத்தினம் வேட்புமனுவினைத் தாக்கல் செய்தார். கூட்டணிக் கட்சி ஆதரவாளர்களுடன் வந்த அவருடன், வேட்புமனுவைத் தாக்கல் செய்ய ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்திடம் தனது வேட்புமனுவை மணிரத்தினம் தாக்கல் செய்தார்.

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். சைதாப்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆலின் சுனேஜாவிடம் அவர் வேட்பு மனுவை வழங்கினார். சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் எம்.எல்.ஏ. சுப்பிரமணியனும், அதிமுக சார்பில் சைதை துரைசாமியும், அமமுக சார்பில் செந்தமிழனும் போட்டியிடுகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பிரகாஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகுருவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கும்மிடிபூண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் டி.ஜெ.கோவிந்தராஜன் போட்டியிடுகிறார்.

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்குக் கேட்கப்போவதாகப் பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் பெரம்பூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் ராஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சங்கரன்கோவில் பேருந்து நிலையம் அருகே உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின், தனது தொண்டர்கள் புடை சூழ சங்கரன்கோவில் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு வந்த ராஜா, தேர்தல் நடத்தும் அலுவலரான கோட்டாட்சியர் முருகசெல்வியிடம் தனது வேட்புமனுவை அளித்தார்.

கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் இரா.பக்தரட்சகன் திறந்த வெளி வாகனத்தில், வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். நெய்வேலி ஆர்.சி. கேட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்த பக்தரட்சகன், தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலதண்டாயுதபாணியிடம் அவர் தமது வேட்பு மனுவை வழங்கினார். வேட்புமனு தாக்கல் செய்ய இருசக்கர வாகனத்தில் வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் அதே வாகனத்திலேயே திரும்பி சென்றார்.

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் தர்மராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமாகா மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர், லால்குடி வருவாய் கோட்டச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வைத்தியநாதனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் தர்மராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமாகா மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர், லால்குடி வருவாய் கோட்டச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் வைத்தியநாதனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தனித் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைக்கள் கட்சி வேட்பாளர் வன்னியரசு வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதலில் அவர் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்.

பின்னர், வானூர் தொகுதி தேர்தல் அலுவலர் சிவாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.முன்னதாக, வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வன்னியரசு உடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், பலரும் அவருடன் அலுவலகத்திற்கு நுழைய முயன்றதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மகாராஜன், வேட்புமனுத் தாக்கல் செய்தார்.  தனது ஆதரவாளர்களுடன் ஆண்டிபட்டி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்த அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்ரமணியத்திடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

சென்னை - ஆயிரம் விளக்கு தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியநாதன், வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அங்கயற்கண்ணியிடம் வைத்தியநாதன்
கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று, வேட்பு மனுவை சமர்பித்தார்.

சென்னை மயிலாப்பூர் திமுக வேட்பாளர் வேலு, வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மயிலாப்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  தமது வேட்பு மனுவை சமர்ப்பித்த வேலு, மாலையில், துலுக்காணம் தோட்டம், ராகவன் தோட்டம்,கோகுலம் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார் வீதி வீதியாக நடந்து சென்று பொது மக்களிடம் திமுக வேட்பாளர் வேலு, வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனபிரியாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி உடன் இருந்தார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதேபோல் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்லமுத்துவும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  மொடக்குறிச்சியில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட உதவி கலால் ஆணையாளருமான ஜெயராணியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments