இந்தியாவுக்கு எதிரான 20ஓவர் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

0 3817
இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது 20ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி 20ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட்கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 18.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. ஜோஸ் பட்லர் 83 ரன்களும், johny bairstow 40 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னணியில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments