நீண்ட கால உள்கட்டமைப்பு திட்டங்களின் வளர்ச்சிக்கு நிதி நிறுவனத்தை தொடங்க மத்திய அமைச்சரவை முடிவு
நீண்ட கால உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதற்காக, நிதி வழங்கும் விதத்தில் வளர்ச்சி நிதி நிறுவனத்தை தொடங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதி ஆதாரத்திற்கு தேசிய வங்கி உருவாக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட போதிலும், சில காரணங்களால் அதனை செயல்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டார்.
எனவே வளர்ச்சி நிதி நிறுவனம் உருவாக்கப்படுவதாகவும், அதற்காக 2021 ஆம் வருடம் 20 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனமாக அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நடவடிக்கை கடன்பத்திர சந்தையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Comments