மார்பை திறக்காமல், மெல்லிய துளையிட்டு வழங்கப்படும் நவீன சிகிச்சை : மிட்ராகிளிப் சிகிச்சை முறையில் அப்பலோ மருத்துவமனை புதிய சாதனை
சென்னை அப்பலோ மருத்துவமனையில் இதயத்தின் மிட்ரல் வால்வு பாதிக்கப்பட்டுள்ள 4 நோயாளிகளுக்கு, மார்பை திறக்காமல் மிட்ராக்ளிப் செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மிட்ரல் வால்வில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்ய மார்பை திறந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது மிட்ராகிளிப் சிகிச்சை மூலம் மார்பில் சிறிதாக துளையிட்டு அதன் வழியாக கசிவு ஏற்பட்டுள்ள வால்வில் மிட்ராக்ளிப் சாதனம் நிலைநிறுத்தப்படுகிறது.
ஜப்பானில், ஒரே நாளில் 3 நோயாளிகளுக்கு மிட்ராக்ளிப் முறையில் சிகிச்சை வழங்கப்பட்டது சாதனையாக இருந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஒரே நாளில் 87 வயது நோயாளி உள்பட நான்கு பேருக்கு மிட்ராக்ளிப் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Comments