போர்த்திய பொன்னாடைக்கு இதோ வேலை வந்துடுச்சி..! அமைச்சரின் ராஜதந்திரம்
கடந்த 5 ஆண்டுகளில் சத்தமில்லா அமைச்சர் என்று பெயரெடுத்த சேவூர் ராமச்சந்திரன் தனக்கு விழுந்த சால்வைகளை வாக்காளர்களுக்கு பொன்னாடையாக போர்த்தி வாக்கு சேகரித்தார். ஓட்டுக்கு துட்டுக்கொடுப்பவர்கள் மத்தியில் துணிகொடுத்த ராஜதந்திரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
ஆரத்தி தட்டு வைத்திருக்கும் பெண்களுக்கு ரூபாய் நோட்டை காலில் வீசும் இந்த வள்ளல் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் விஸ்வநாதனின் ஆதரவாளர்..! ஓட்டுக்கேட்டுச்செல்லும் இடங்களில் வரியவர்களை கண்டால் வள்ளலாக இறங்கி வாரிக்கொடுத்து விடுகின்றார் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
இவருக்கு ஒருபடிமேலே சென்று விட்டார் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். சிலை திருட்டு வழக்குகள் படம் எடுத்து ஆடிய நேரத்தில் கூட வாய்திறக்காமல் கடந்த 5 வருடங்களாக சத்தமில்லாமல் தனது பணிகளை மேற்கொண்டவர் அமைச்சர் ராமச்சந்திரன்..! தனக்கு விழுந்த சால்வைகளை வீணாக்க விரும்பாத ராமச்சந்திரன் அவற்றை கையோடு எடுத்து வந்து ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு பொன்னாடையாக போர்த்தி வாக்கு சேகரித்து வருகின்றார்
சிலர் பொன்னாடையை வாங்கிக் கொண்டு கோரிக்கையை நைசாக சொல்லிவிடுகின்றனர். பெண்களுக்கு பொன்னாடையை கையில் கொடுத்து தனக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுக்கும் ராமச்சந்திரனின் ராஜதந்திரம் பணத்தை விட பாசத்துடன் பவர்புல்லாக கவர்ந்திழுக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்
Comments