அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் : வானிலை ஆய்வு மையம்

0 1425
அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் : வானிலை ஆய்வு மையம்

டுத்த இரு தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ்  உயர்ந்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில்,தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் எனவும், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி  நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments