காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

0 4119
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க, தனிச் சிறப்பு சட்டங்கள் இயற்றப்படும், மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை 10சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும், புதிய தொழில்முனைவோருக்கு 5 ஆண்டுகள் வரை வரி விலக்கு வழங்க நடவடிக்கை, ஆண்டு தோறும் 500 இளைஞர்களை தேர்வு செய்து ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி, சிறுகுறு தொழில்முனைவோருக்கு வங்கிக்கடனில் 50 சதவீதம் மானியமாக வழங்க நடவடிக்கை, தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டு வர நடவடிக்கை, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments