அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்க முடியாது - வெனிசுலா துணை அதிபர்
அஸ்ட்ராஜெனகாவின் கோவிட் -19 தடுப்பூசியை வெனிசுலா அங்கீகரிக்காது என அந்நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez) தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தப்பட்டு டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர் ரத்தம் உறைந்து உயிரிழந்தார்.
இதனையடுத்து நார்வே, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் அஸ்ட்ராஜெனகா ஊசி போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.
இதனைத் தொடர்ந்து வெனிசுலாவும் இத்தடுப்பூசியை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்துள்ளது.
Comments