ஏப்ரல் இறுதியில் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதாக தகவல்; இந்தோ-பசிபிக் பிராந்திய உறவுகள் பற்றி பேசுவார் என எதிர்பார்ப்பு
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பயணத்தின் போது, இந்தியாவில் பிரிட்டன் முதலீடுகளை அதிகரிப்பது பற்றியும், எல்லையில் சீனாவின் அத்துமீறல்க பற்றியும் அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, இந்தோ பசிபிக் பிராந்தியம் குறித்த தனது பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை முன்னுரிமைகளை பிரிட்டன் இன்று வெளியிட உள்ளது.
இந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Comments