'என்னோட விருப்பத்துக்கு அவர் குறுக்கே நின்றதே இல்லை ! '- தேர்தலில் போட்டியிடும் நெல்லை கூடுதல் கமிஷனரின் மனைவி சொல்கிறார்

0 11138
தேர்தலில் போட்டியிடும் ராணி ரஞ்சிதம்

நெல்லை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரையின் மனைவி ராணி ரஞ்சிதம் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுகிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சந்தனவீரப்பனை பிடிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெள்ளத்துரை. தமிழக போலீஸில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான இவர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பல ரவுடிகளை என்கவுன்டர் செய்தவர். ரவுடிகள் பிரபு, பாரதி, கவியரசு, முருகன் ஆகியோரை வெள்ளத்துரை என்கவுன்டர் செய்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் ரவுடி அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுன்டர் செய்த குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார். தற்போது, நெல்லை மாநகர கூடுதல் கமிஷனராக வெள்ளத்துரை உள்ளார். இவரின் மனைவி பெயர் ராணிரஞ்சிதம். தற்போது, 54 வயதான ராணி ரஞ்சிதம் எம்ஏ எம்.பில் தமிழ் இலக்கியம் படித்துள்ளார்.

திருச்சியில் உள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். வெள்ளத்துரை ராணி ரஞ்சிதம் தம்பதிக்கு சுந்தரி, நிக்கின் ஆகியோ மகள், மகன் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். இதில், சுந்தரிக்கு திருமணமாகி விட்டது. சமுதாய நலப்பணிகளில் அக்கறை கொண்டுள்ள ராணி ரஞ்சிதம் அறக்கட்டளை நிறுவி அதன் வழியாக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மனோரஞ்சிதம் முடிவு செய்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.ம.மு.க சார்பில், போட்டியிடுகிறார். அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் இசக்கி சுப்பையா, தி.மு.ச சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து ராணி ரஞ்சிதத்திடம் பேசிய போது,'' சின்ன வயதிலிருந்தே மக்களுக்கு உதவி செய்வது பிடிக்கும். என்னால் முடிந்த நலப்பணிகளை மேற்கொண்டுதான் இருந்தேன். அதற்கான, ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். அந்த ஆர்வம் காரணமாத்தான் இப்போது தேர்தல்ல இறங்கியிருக்கிறேன். அ.ம.மு.க கொள்கைகள் பிடித்திருந்ததால், அந்த கட்சியை தேர்வு செய்தேன். அம்பாசமுத்திரத்தில் கண்டிப்பா ஜெயிப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து ஜெயிக்க வைத்ததால், அங்கேயே தங்கியிருந்து மக்கள் பணிகளை மேற்கொள்வேன். இது என்னோட தனிப்பட்ட விருப்பம். என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என் கணவர் குறுக்கே நின்றதே இல்லை. அவரோட டிபார்ட்மென்ட் வேற. என்னோட மக்கள் பணி வேற என்னை அம்பை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் '' என்று நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments