காப்பீடுத் துறையில் 74 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி: நாடாளுமன்ற மாநிலங்களவையில் மசோதா தாக்கல்
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பை 74 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு, 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து காப்பீட்டுச் சட்டம் 1938ல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் சட்டத் திருத்தத்திற்கான மசோதாவை மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காப்பீட்டு நிறுவன நிர்வாகத்தில் பெரும்பாலானோர் இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments