எவரெஸ்ட் மலை ஏற பக்ரைன் இளவரசர் அடங்கிய 16 பேர் நேபாளம் வருகை
எவரெஸ்ட் மலையில் ஏறுவதற்காக பக்ரைன் இளவரசர் உள்ளிட்ட 16பேர் அடங்கிய மலையேறும் குழுவினர் நேபாளம் வந்துள்ளனர்.
உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரம் 8ஆயிரத்து 849 மீட்டர் உயரத்தை கொண்டதாகும். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு நேபாளம் தடை விதித்து இருந்தது. தற்போது அந்த தடை விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து மலையேற்ற குழுவினர் ஆர்வமுடன் நேபாளத்திற்கு வந்துள்ளனர்.
நேபாளத்தில் கொரோனா வைரசால் 2 லட்சத்து 75ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 3ஆயிரத்து பதினான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
Comments