சி.ஏ, சி.எஸ் உள்ளிட்ட படிப்புகள் இனி முதுகலைப் பட்டமாக கருதப்படும்: UGC அறிவிப்பு

0 12690
சி.ஏ, சி.எஸ் உள்ளிட்ட படிப்புகள் இனி முதுகலைப் பட்டமாக கருதப்படும்: பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு

சி.ஏ, சி.எஸ், உள்ளிட்ட படிப்புகள் இனி முதுகலை பட்டத்திற்கு இணையாக கருதப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், ICAI, CA, CS, ICWA உள்ளிட்ட படிப்புகளை படித்த மாணவர்கள் உயர்படிப்பை மேற்கொள்ளும் வகையில் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இத்துறை மாணவர்கள் வணிகம் மற்றும் அது சார்ந்த துறைகளில் பிஎச்டி படிப்பை தொடர ஒரு வாய்ப்பை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் வரவேற்றுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments