அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..! சுயேட்சை ஆசை வேண்டாம்
தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத அதிமுகவினர் சுயேட்சையாக போட்டியிட்டால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், அவருக்கு ஆதரவான நிர்வாகிகளும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அமைச்சர் தங்கமணி எச்சரித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சந்திரனை அறிமுகப்படுத்தி பேசிய அமைச்சர் தங்க மணி, கட்சி அரிவித்துள்ள வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் அதிருப்தியாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் யாராக இருந்தாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு இருக்கின்றவரைதான் மரியாதை என்று எச்சரிக்கை விடுத்தார்
அதிருப்தியாளர்களுக்கு குட்டிகதை ஒன்றையும் அமைச்சர் தங்கமணி சொன்னார், கழுதை ஒன்று சாமியை சுமந்து சென்றதாகவும், மக்கள் சாமியை வணங்கியதை பார்த்து கழுதை தன்னை தான் வணங்குவதாக நினைத்து இறுமாப்போடு தனியாக வந்த போது கழுதையை மக்கள் கல்லால் அடித்து விரட்டினார்கள் என்று சுயேட்சையாக களம் காணும் அதிருப்தியாளர்களை கடுமையாக சாடினார்
Comments