பெட்ரோல்-டீசல் விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரப்படுமா? நிதி அமைச்சர் பதில்

0 7747
பெட்ரோல்-டீசல் விலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரப்படுமா?

பெட்ரோல்-டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் பரிந்துரை எதுவும் தற்போது அரசின் பரிசீலனையில் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எழுத்துபூர்வமான பதில் ஒன்றில் இதைத் தெரிவித்துள்ள அவர், இந்த பொருட்களை ஜிஎஸ்டிக்குள் எப்போது கொண்டு வர இயலும் என்பதை ஜிஎஸ்டி கவுன்சில் மட்டுமே முடிவு செய்ய முடியும் என கூறியுள்ளார்.

வருவாயில் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல அம்சங்களை கவனத்தில் கொண்ட பிறகே பெட்ரோல் உள்ளிட்ட 5 பெட்ரோலியம் பொருட்களின் விலையை ஜிஎஸ்டியில் கொண்டு வருவது பற்றி முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments