கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல்

0 970
கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மதம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மாநிலத்திலும் கடந்த 13 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் கண்ணூர் மாவட்டம் தர்மதம் தொகுதியில் இன்று பினராயி விஜயன் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டும் அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திவாகரனை எதிர்த்து போட்டியிட்டு வென்றார். இதே போல கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா மாட்டனூர் தொகுதியிலும், பிற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments