ஒற்றுமைக்கான சிலையை இதுவரை 50 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர் - குஜராத் மாநில அரசு

0 1244
குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலையை இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

நர்மதா மாவட்டம், கெவாடியாவில், சர்தார் சரோவர் அணை ஓரம் கட்டப்பட்டுள்ள இந்த சிலையை பிரதமர் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாள் திறந்து வைத்தார்.

182 மீட்டர் உயரமுள்ள இந்த சிலைக்கு பார்வையாளர்கள் வருகை தந்துள்ளது குறித்து குஜராத் மாநில கூடுதல் தலைமை செயலர் ராஜீவ் குப்தா தெரிவித்துள்ளார்.

சிலையை மேலும் அதிக மக்கள் பார்வையிட வசதியாக, நாட்டின் பல நகரங்களில் இருந்து கூடுதலாக 8 ரயில்களும், அகமதாபாத்தில் இருந்து நீரில் இறங்கும் விமான சேவையும் நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments