சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்துள்ள விவசாயி..!
ஒடிசா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் சூரிய சக்தியில் இயங்கும் காரை வடிவமைத்துள்ளார்.
மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த சுஷில் அகர்வால் உருவாக்கியுள்ள இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால், 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
கொரோனாவால் வீட்டில் முடங்கியிருந்த நேரத்தில் சூரிய சக்தி பேட்டரியில் இயங்கும் காரை உருவாக்கியதாக கூறும் சுஷில், காரில் பயன்படுத்தப்படும் பேட்டரியை 8 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என்றும், மெதுவாக சார்ஜ் ஆகும் பேட்டரி என்பதால், இது 10 ஆண்டுகள் வரை உழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த காரை உருவாக்க தனக்கு 2 மெக்கானிக்குகள் உதவியதாகவும் சுஷில் அகர்வால் கூறியுள்ளார்.
Comments