முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது கட்சியினருக்கு மட்டுமே முதலமைச்சராக இருக்கிறார் : மெட்ரோமேன் ஸ்ரீதரன்
வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி இந்த முறை கேரளாவில் பாஜக பிரச்சாரம் செய்யும் என மெட்ரோமேன் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
88 வயதான ஸ்ரீதரன், டெல்லி மெட்ரோ, கொங்கன் ரயில்வே என பல சவாலான ரயில்வே திட்டங்களை நிறைவேற்றியவர். அண்மையில் பாஜகவில் சேர்ந்த அவர் கேரளாவின் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று கேரளாவில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என பிரச்சாரம் செய்து வரும் ஸ்ரீதரன், முதலமைச்சர் பினராயி விஜயன் அவரது கட்சியினருக்கு மட்டுமே முதலமைச்சராக இருக்கிறார் என்றும் மக்களுக்கான முதலமைச்சர் இல்லை எனவும் கூறியுள்ளார்.
Comments