மேற்கு வங்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் - அமைச்சர் நிதின் கட்கரி
மேற்கு வங்க மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக கொல்கத்தா செல்லும் வழியில், விமானத்தில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், மேற்கு வங்கத்திலும் பாஜக அரசு அமைந்தால், அந்த மாநிலத்தின் வளர்ச்சி மத்திய-மாநில அரசுகளால் பலமடங்கு அதிகரிக்கும் என கூறினார்.
நில ஆர்ஜிதமும், தடையில்லா சுற்றுச்சூழல் சான்றிதழும் கிடைத்தால், மேற்கு வங்கத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
நந்திகிராமில், மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டது தாக்குதல் அல்ல என்றும் அது வெறும் விபத்து என்றும் கட்கரி தெரிவித்தார்.
Comments