வருகிற 19-ம் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

0 2637
வருகிற 19-ம் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 19-ம் தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த செய்திக்குறிப்பில், 18-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

19-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும், ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments