விவசாயிகள் நாளுக்கு நாள் ஏழையாவதாக மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு
விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏழையாவதாக மேகாலய ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பாக்பத்தில் பேசிய அவர், விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு உறுதி செய்தால் விவசாயிகள் மனம் மாறி விடுவர் எனத் தெரிவித்தார்.
விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தைக் கைது செய்ய விடாமல் தான் தலையிட்டுத் தடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவ வேண்டாம் எனப் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இடுபொருட்களின் விலை உயர்ந்தும், விளைபொருட்களின் விலை மலிந்தும் வருவதால் விவசாயிகள் நாளுக்கு நாள் ஏழையாவதாகவும் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.
Comments