3 மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களின் இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

0 1535
ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கருதப்படும் 7 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கருதப்படும் 7 இடங்களில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

டெல்லி, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லியில் ஜாப்ராபாத், பெங்களூருவில் இரண்டு இடங்கள், கேரளாவில் கண்ணூர் மற்றும் கொச்சியில் நான்கு இடங்கள் ஆகியவற்றில் சோதனை நடந்தது.

இந்த இடங்களில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட பலர் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை தொடர்ந்து நடப்பதாகவும், உரிய விசாரணைக்குப் பிறகு சந்தேகத்திற்குரிய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments