நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

0 2038
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடு முழுவதும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கிப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதன் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவைக் கண்டித்து ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இன்றும், நாளையும் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் எனப் பத்து லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் பணம் செலுத்தல், எடுத்தல், காசோலையைப் பணமாக்குதல், கடன் ஒப்புதல் அளித்தல் ஆகிய வங்கிப் பணிகள் கடுமத்திய நிதியமைச்சர்மையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments