நாக்பூரில் கொரோனா பரவலைத் தடுக்க இன்று முதல் ஒருவாரம் முழு ஊரடங்கு
மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று முதல் ஒருவாரக்காலத்துக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
மார்ச் மாதத்தின் 14 நாட்களில் மட்டும் நாக்பூரில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக இரண்டாயிரத்து 252 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க இன்று முதல் ஒருவாரக் காலத்துக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் சாலைகள் இன்று வாகனங்கள் இயக்கமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
பால்பொருட்கள், காய்கறிகள் பழங்கள் தானியங்கள், மருந்துகள் ஆகியவற்றை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், மருத்துவ ஊர்திகள் ஆகியன மட்டும் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments