"மமதா பானர்ஜி தாக்கப்படவில்லை ,விபத்தில்தான் கால்முறிவு" விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் தகவல்
மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியை யாரும் தாக்கியதற்கான ஆதாரம் இல்லை என்றும் கார் கதவு இடித்துக் கொண்ட விபத்தில்தான் காயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தம்மை நான்கைந்து பேர் தள்ளிவிட்டு தாக்கியதாகவும் கொல்ல முயற்சித்ததாகவும் மமதா குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து தலைமைச் செயலாளரிடம் விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு அறிக்கை அளித்துள்ளனர்.
மமதாவின் புகார்களுக்கு முரணாக இந்த அறிக்கை உள்ளதாக தெரிவித்துள்ள பாஜக , தேர்தல் ஆணையம் இந்த விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளிப்படுத்தி மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இதனிடையே பணியின் போது கவனக்குறைவு காரணமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட சிலரை இடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Comments