காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசியை மார்ச் 25 வரை காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏக்கு நீதிமன்றம் அனுமதி
முகேஷ் அம்பானி வீட்டருகே காரில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசியை மார்ச் 25ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கத் தேசியப் புலனாய்வு முகமைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மும்பையில் அம்பானி வீட்டருகே வெடிபொருள்களுடன் கார் நின்றது குறித்துக் காவல்துறை விசாரித்தது. காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரன் உடல் கல்வா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
மன்சுக்கின் மனைவி தன் கணவர் மரணத்தில் காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாசி மீது சந்தேகம் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
Comments