சர்வதேச ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புதிய சாதனை

0 3260
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், சர்வதேச ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற இந்தியா-தென் ஆப்ரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி, 3க்கு 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் 45 ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ், சர்வதே ஒருநாள் மகளிர் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments