நாமக்கல்லில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ. 8 லட்சம் மோசடி
நாமக்கல்லில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பட்டதாரி இளைஞரிடம் 8 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டான்.
மோகனூரைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞர் வேலைக்காக லண்டன் செல்ல, நாமக்கல் தெய்வலட்சுமி பைனான்ஸ் உரிமையாளர் செல்வமணி என்பவனிடம் 8 லட்ச ரூபாயை கொடுத்துள்ளார்.
செல்வகுமாரிடம் தொகை நிரப்பப்படாத காசோலை ஒன்றில் கையொப்பமும் பெற்ற செல்வமணி, அவர் பெயரில் போலியான பட்டப்படிப்பு சான்றிதழையும் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேர்க்காணலின்போது ஆங்கிலம் தெரியவில்லை எனக் கூறி லண்டன் நிறுவனம் செல்வகுமாரை நிராகரிதுள்ளது. இதனையடுத்து தாம் கொடுத்த பணத்தை செல்வமணியிடம் திருப்பிக் கேட்டுள்ளார் செல்வகுமார்.
ஆனால் செல்வகுமார் கொடுத்த காசோலையைக் கொண்டு அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்ட செல்வமணி, அதனைத் திருப்பித் தர மறுத்துள்ளான். செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் செல்வமணியை கைது செய்த போலீசார், அவனது கூட்டாளி அசோக் என்பவனை தேடி வருகின்றனர்.
Comments