மகளுடன் நெல் நாற்று நட்டு வாக்கு சேகரித்த அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமது மகளுடன் நெல் நாற்று நடவு செய்து, சாகுபடி பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக சார்பாக விராலிமலை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர், தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சாரணகுடியில் உள்ள விவசாய நிலத்தில் தனது மூத்த மகள் ரிதன்யா பிரியதர்ஷினியுடன் இணைந்து நாற்றுநட்டு, அங்கு நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Comments