மியான்மரில் மக்கள் பங்கேற்காத நூதன போராட்டம்
மியான்மரில் No people protest என்ற பெயரில் மக்கள் பங்கேற்காத போராட்டம் நடத்தப்பட்டது. பிப்ரவரி ஒன்றாம் நாள் மியான்மரில் ஆட்சியாளர்களைப் பதவியிறக்கி, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மக்கள் பங்கேற்காத போராட்டத்தை இளைஞர்கள் குழு முன்னெடுத்தனர்.
சிறைபிடிக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும், சர்வாதிகாரத்தை ஒழிக்க வேண்டும், ஜனநாயக ஆட்சி திரும்ப வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சமூக இடைவெளியுடன் வைத்து வித்தியாசமான போராட்டம் நடத்தப்பட்டது.
Comments