முதலமைச்சர் நாளை வேட்பு மனு தாக்கல்..!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். இதனிடையே அதிமுக தேர்தல் அறிக்கை சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரச்சாரம், வியூகம் என தீவிர கள பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
அதிமுக சார்பில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை பிற்பகலில் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
அதன் பின்னர், தமது தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, ஜலகண்டபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி நகராட்சி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இதனிடையே அதிமுகவின் தேர்தல் அறிக்கை சற்று நேரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதில் பல்வேறு புதிய திட்டங்களும், வாக்குறுதிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments