கர்நாடகம் - மகாராஷ்டிரம் இடையே எல்லைத் தகராறு இரு மாநிலப் பேருந்துப் போக்குவரத்து நிறுத்தம்
கர்நாடகம் - மகாராஷ்டிரம் இடையே எல்லைத் தகராறு உள்ள நிலையில் இரு மாநிலங்கள் இடையான பேருந்துப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெல்காம் மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் அதிகம் உள்ளதால் அதை மகாராஷ்டிரத்துடன் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நெடுங்காலமாக உள்ளது.
மகாராஷ்டிரத்தின் கோலாப்பூரில் உணவகங்கள், கடைகளில் கன்னட எழுத்துக்களை மராத்திய அமைப்பினர் தார் பூசி அழித்தனர். இதற்குப் பதிலடியாகக் கர்நாடகத்தில் கன்னட அமைப்பினர் மராத்தி எழுத்துக்களைத் தார் பூசி அழித்தனர்.
பெல்காமில் சிவசேனா பிரமுகரின் காரைக் கன்னட அமைப்பினர் தாக்கிச் சேதப்படுத்தினர். இந்தத் தகராறுக்கு இடையே கோலாப்பூரில் மகாராஷ்டிர அரசுப் பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடைபெற்றது.
இந்நிலையில் தகாத நிகழ்வுகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநிலங்கள் இடையே பேருந்துப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Comments