ரூ. 2.75 லட்சத்துக்கு இளைஞர் வாங்கிய பென்லி பைக்... கடன்கார நண்பன் செய்த கொடூரம்!

0 226163

வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்காக, நண்பன் வாங்கிய ரூ. 2.75 லட்சம் மதிப்புள்ள பைக்கை அபகறிக்க திட்டமிட்டு கால்வாயில் தள்ளி விட்டவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
 
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த வடக்கிப்பாளையம் என்ற  ஊரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர், சமீபத்தில் பென்லி ரக பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 2.75 லட்சம் ஆகும். இரு நாள்களுக்கு முன்பு , தன்  நண்பர்களை பார்த்து வருவதாக, பெற்றோரிடத்தில் கூறிய புருஷோத்தமன் புதிய பைக்கில் மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார். பின்னர், உதயகுமார், என்ற தன் கல்லூரி கால நண்பரை புருஷோத்தமன்  சந்தித்துள்ளார். இருவரும் புதிய பைக்கில் காண்டூர் கால்வாய் அருகே சென்று , பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
 
இந்த சமயத்தில், காண்டூர் கால்வாயில் நண்பர் புருஷோத்தமனை தள்ளி விட்ட உதயகுமார், பென்லி பைக்கை எடுத்து சென்று விட்டார். அந்த பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வரும் கார்த்திக் என்பவரிடத்தில் உதயகுமார் 45,000 கடன் வாங்கி இருந்துள்ளார். கார்த்திக் கொடுத்த கடனை திருப்பி தருமாறு உதயகுமாரிடத்தில் கேட்டு வந்துள்ளார். இந்த நெருக்கடியில் இருந்த உதயகுமார், உயிர் நண்பன் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி விட்டுள்ளார்.
 
தொடர்ந்து எதுவும் நடக்காதது போல சென்று நண்பரின் பைக்கை விற்க முயன்றுள்ளார். ஆனால், ஆர்.சி. புக் இல்லாததால் பைக்கை விற்க முடியவில்லை. தொடர்ந்து, பைக்குடன் சென்று, கார்த்திக்கை சந்தித்த உதயகுமார், தான் பணத்தை திருப்பி தரும் வரை  பைக் அங்கே நிற்கட்டும் என்று கூறி நிறுத்திவிட்டு சென்று விட்டார். இதற்கிடையே, மகனை காணவில்லை என்று புருஷோத்தமனின் பெற்றோர்,  என்று வடக்கிபாளையம் போலீஸில் புகாரளித்தனர்.
 
தொடர்ந்து, போலீஸார் புருஷோத்தமனை தேடிய போது, கார்த்திக்கின் கோழிப்பண்ணையில் பென்லி பைக் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. கார்த்திக்கிடத்தில் விசாரித்ததில், உதயகுமார் பைக்கை நிறுத்தி விட்டு சென்றதாக தெரிவித்துள்ளார். உதயகுமாரை பிடித்து போலீஸார் விசாரித்த போது, நண்பனின் பைக்கை அபகரிக்க புருஷோத்தமனை கால்வாயில் தள்ளியது தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் உதயகுமார், அடையாளம் காட்டிய இடத்தில் புருஷோத்தமனின் உடலை போலீஸார் தேடி வருகின்றனர். பைக்கை பறிக்க உதயகுமார் செய்த காரியத்தால் வடக்கிப்பாளையம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments